மட்டக்களப்பு, கல்லடிப் பாலத்திற்கு அருகில் உள்ள கடற்தொழில் நீரியல் வளத் திணைக்களத்திற்குச் சொந்தமான ஐஸ் தொழிற்சாலையிலேயே இன்று (சனிக்கிழமை) இரவு இந்த தீ விபத்து இடம்பெற்றது.
குறித்த ஐஸ் தொழிற்சாலை நீண்ட காலமாக கைவிடப்பட்டு அப்பகுதி பற்றைக்காடாய் காணப்பட்ட நிலையில் இவ்வாறு தீ ஏற்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாநகர சபையின் தீயணைக்கும் படையினர் தீயைக் கட்டுப்படுத்தினர். குறித்த கட்டடத்தின் கூரைப்பகுதி மற்றும் அங்கிருந்த பழைய பொருட்கள் தீயில் எரிந்துள்ளன.
இந்த தீ விபத்து தொடர்பான விசாரணையை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.