இங்கிலாந்தில் உள்ள விமான நிலையமொன்றின் மேற்கூரையில் இருந்து மழை ஒழுக்கு ஏற்பட்டதால் அங்கிருந்த பயணிகள் அதிர்ச்சிக்குள்ளாகினர்.
லண்டனில் உள்ள லூட்டன் விமான நிலையத்தில் திடீரென பயணிகள் சற்றும் எதிர்பாராத விதமாக, மேற்கூரையில் இருந்து, மழை ஒழுக்கு ஏற்பட்டது.
மேற்கூரையில் விரிசல் ஏற்பட்டு விமான நிலையத்திற்குள் 15 நிமிடங்களுக்கும் மேலாக மழை ஒழுக்கு ஏற்பட்ட, அங்கு தண்ணீர் தேங்கி சிறிய குளம் போல காட்சியளித்துள்ளது.
இதனால் விமான நிலையத்துக்குள் இருந்த பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.
இந்த காணொளி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவ தொடங்கியது. இச்சம்பவத்திற்கு இணையவாசிகள் பலரும் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
இதில் ஒருவர், ‘உலகிலேயே மிக மோசமான விமான நிலையம் இதுதான்’ எனவும், மற்றொருவர், ‘இது மிகவும் மோசமான நிகழ்வு. பராமரிப்பு சரியாக இல்லை’ எனவும் கருத்து பகிர்ந்துள்ளார்.
இதையடுத்து லூடான் விமான நிலையம், பயணிகளிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கில் பதிவிட்டது.
இதில், ‘எங்கள் சேவையில் சிறிய தடங்கல் ஏற்பட்டது. இந்த நிகழ்வுக்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம். எதிர்பாராமல் இப்படி நிகழ்ந்துவிட்டது. இதனை சரிசெய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம்’ என குறிப்பிட்டுள்ளது.