ஒப்பந்தமற்ற பிரெக்ஸிற் தொடர்பாக நேற்று (சனிக்கிழமை) ஒஸ்திரிய மாகாணமான டைரோலில் உள்ள ஒரு பிராந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
பணமதிப்பிழப்பு ஒப்பந்தத்தின் விதிமுறைகளை திருத்துமாறு பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அழுத்தம் கொடுத்து வருகிறது. இந்நிலையில் இருதரப்பும் சமரசம் செய்யாவிட்டால், ஒப்பந்தமற்ற பிரெக்ஸிற்க்கு பிரஸ்ஸல்ஸ் பொறுப்பேற்க வேண்டும் என அவர் கூறினார்.
முன்னாள் பிரதமர் தெரசா மேயினால் கொண்டுவரப்பட்ட பிரெக்ஸிற்றில் சில திருத்தங்களை கொண்டுவர வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் அப்போது கோரிக்கை விடுத்திருந்தபோதிலும் அப்போதைய பிரதமர் அதில் திருத்தத்திற்கு இடமில்லை என கூறியிருந்தார்.
ஆனால் அந்த ஒப்பந்தத்தின் ஒரு முக்கிய உறுப்பு, ஐரிஷ் “பேக்ஸ்டாப்” என அழைக்கப்படுபவை அகற்றப்பட வேண்டும் என்று பிரதமர் பொரிஸ் ஜோன்சன் கூறியிருந்தார்.
தற்போதைய ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் ஜீன் க்ளூட் ஜுங்கர் வரும் நவம்பர் மாதம் 1 ஆம் திகதி பதவியிலிருந்து வெளியேறுவதையடுத்து ஜேர்மனியை சேர்ந்த உர்சுலா பதவியேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.