இந்த இடைத்தேர்தல், பொரிஸ் ஜோன்சன் பிரதமராகப் பதவியேற்று எட்டு நாட்களில் நடைபெற்றது.
இந்தத் தேர்தலில் லிபரல் ஜனநாயகக் கட்சி வெற்றி பெற்றுள்ளதன் மூலம் கொன்சர்வேற்றிவ் கட்சி தனது ஒரு ஆசனத்தை இழந்துள்ளது.
லிபரல் ஜனநாயகக் கட்சியின் வேல்ஸ் தலைவரான ஜேன் டொட்ஸ் 13,826 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். கொன்சர்வேற்றிவ் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கிறிஸ் டேவிஸ் 12,401 வாக்குகளைப் பெற்றார்.
கிறிஸ் டேவிஸ் தவறான செலவீனத்தை சமர்ப்பித்தன் காரணமாகவே இந்த இடைத்தேர்தல் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது .
மூன்றாவது இடத்தினைப் பெற்ற பிரெக்ஸிற் கட்சி வேட்பாளர் டெஸ் பார்க்கின்சன் 3,331 வாக்குகளைப் பெற்றார்.
நான்காவது இடைத்துக்குத் தள்ளப்பட்ட தொழிற்கட்சிக்கு இது ஒரு மோசமான பின்னடைவாகும்.
இந்த இடைத்தேர்தல் வெற்றியுடன் லிபரல் ஜனநாயகக் கட்சி 13 பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.
ஆளும் கொன்சர்வேற்றிவ் கட்சி DUP ஆதரவுடன் 320 பாராளுமன்ற உறுப்பினர்களையும் எதிர்க்கட்சிகள் 319 பாராளுமன்ற உறுப்பினர்களையும் கொண்டுள்ளன.