அத்துடன் மத்திய அரசு சர்வாதிகாரத்துடன் செயல்படுகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நெல்லையில் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாடுறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “நாடாளுமன்றத்தில் பல சட்டங்களை பா.ஜ.க. அவசர கதியில் நிறைவேற்றி வருகிறது.
இதனால் மக்களுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் பல மொழி பேசும் 125 கோடி மக்கள் வேற்றுமையில் ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறார்கள்.
பா.ஜ.க. கொண்டு வரும் சட்டங்களினால் மதசார்பின்மை தன்மை கொண்ட நம்நாடு சிதையும் அபாயம் உள்ளது.
மிக பெரிய எண்ணிக்கையில் பா.ஜ.க. வெற்றி பெற்றாலும் அம்பேத்கார் உருவாக்கிய சட்டங்களை நிறைவேற்ற வேண்டும். ஆனால் அவர்கள் ஆர்.எஸ்.எஸ். கொள்கையை செயல்படுத்த முயற்சிக்கிறார்கள்.
தேசிய கல்வி கொள்கையால் அனைத்து மாணவர்களும் பாதிக்கப்படுவார்கள். 22 மொழி பேசும் இந்தியாவில் இந்தி, சமஸ்கிருதத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்” என தெரிவித்துள்ளார்.