பூண்டுலோயா சீன் தோட்டத்தில் நிர்மாணிக்கபட்ட 35 தனி வீட்டுத் திட்டத்தினைக் கொண்ட ஓ.ஏ.இராமையா புரத்தினை இன்று (சனிக்கிழமை) அமைச்சர் திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் எம்.உதயகுமார், மனிதவள பெருந்தோட்ட அபிவிருத்தி நிறுவனத்தின் தலைவர் வீ.புத்திரசிகாமணி உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில் அமைச்சர் திகாம்பரம் பேசுகையில், “இதுவரை காலமும் மலையகத்தில் இருந்த தலைவர்கள் மலையகத்தைப் பற்றி பேசிக்கொண்டு இருந்தார்களே தவிர இது போன்ற கிராமங்களை அமைத்துக் கொடுக்கவில்லை.
நான் அமைச்சுப் பொறுப்பை ஏற்ற பின்னரே இவ்வாறு தனி வீட்டுத் திட்டங்களை மேற்கொண்டு வருகிறேன். இந்த வீட்டுத் திட்டங்களை இந்திய அரசாங்கமும் இலங்கை அரசாங்கமும் இணைந்து அமைத்துத் தருகின்றார்கள்.
இதனிடையே, 50 ரூபாய் கொடுப்பனவை நாம் கட்டாயம் பெற்றுத் தருவோம். ஆனால் 20 ரூபாயை கொடுத்தவர்கள் நான் மக்களை ஏமாற்றுவதாகக் கூறுகிறார்கள். நான் ஒரு போதும் மக்களை ஏமாற்றமாட்டேன்.
இதேவேளை, வரும் ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது என்பது தொடர்பாக நாம் வெகுவிரைவில் அறிவிக்கவுள்ளோம்” என்று தெரிவித்தார்.