12 பேர் காயமடைந்துள்ளனர்.
ஒன்ராறியோ, லண்டன் 450 வூட்மன் அவென்யூ பகுதியில் உள்ள உள்ள இரு வீடுகளில் இரவு 10:37 மணியளவில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தீ விபத்தில் காயமடைந்த 12 பேரில் ஏழு பேர் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த தீ விபத்து காரணமாக குறித்த பகுதியில் இருந்த அதிகளவான வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
பெண் ஒருவர் செலுத்திய வாகனம் வீடொன்றுக்குள் நுழைந்ததால் எரிவாயுக் குழாய் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது என்று கூறப்படுகின்றது.
வாகனத்திச் செலுத்திய பெண் சாரதி (வயது 23 ) மதுபோதையில் வாகனத்தைச் செலுத்தியதாகக் குற்றம்சாட்டப்பட்டு கைதுசெய்யப்பட்டுள்ளார்