அத்துடன், தேர்தலுக்காக மட்டும் மக்களிடம் தி.மு.க. வந்துசெல்வதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வேலூர் உமராபாத்தில் தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து இன்று (வெள்ளிக்கிழமை) மு.க.ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார்.
இந்த பிரசாரக் கூட்டத்தில் அவர் உரையாற்றுகையில், “தேர்தலுக்காக மட்டும் வந்து செல்பவர்கள் நாங்கள் அல்ல. 8 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லை என்றாலும் மக்களுக்காக போராடி வருகிறோம்.
ஆட்சியில் இல்லாவிட்டாலும் மக்கள் பிரச்சினைகளுக்காக தொடர்ந்து மத்தியில் குரல் கொடுத்து வருவதும் தி.மு.க. தான். வரும் 5ஆம் திகதி நடைபெறவுள்ள தேர்தலில் நாமே வெல்வோம். பொய்க் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து ஏப்ரலில் நடக்க வேண்டிய தேர்தலை இரத்துச் செய்தனர்.
இந்நிலையில் வேலூர் தொகுதியில் தி.மு.க.வின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது” என்று குறிப்பிட்டார்.