அத்துடன், பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களோ அன்றி உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் கூட ஐக்கிய தேசியக் கட்சியின் பக்கம் ஒருபோதும் செல்லமாட்டார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐ.தே.க.வுடன் இணையவுள்ளதாக வெளியான தகவல் குறித்து கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும், பொதுஜன பெரமுன, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகிய இரு தரப்பின் உறுப்பினர்கள் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்துகொள்ள இருப்பதாகவும், அவர்கள் விடுத்த கோரிக்கைகளுக்கு அமையவே ஒப்பந்தம் கைச்சாத்திடல் பிற்போடப்பட்டது எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் குறிப்பிட்டுள்ளார். இது வேடிக்கையாக உள்ளதாகவும் அவர் கூறினார்.
தற்போது ஜனாதிபதி வேட்பாளர் யார் என்ற போட்டி ஐக்கிய தேசியக் கட்சிக்குள் பாரிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர், கட்சியின் உள்ளகப் பிரச்சினையே ஐக்கிய தேசியக் கட்சியை பலவீனப்படுத்தும் என்றும் கூறினார்.