மேற்கொள்ளப்பட்ட வாக்கெடுப்பின் அடிப்படையில், மாநில முதல்வருக்கான சம்பளம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் சம்பளம் ஆகியன குறைப்படவுள்ளது.
அனைத்துக் கட்சி உறுப்பினர்கள் குழு ஏகமனதாக நேற்று (வியாழக்கிழமை) மேற்கொண்ட இந்த முடிவின் அடிப்படையில், தேர்தலில் வெற்றிபெற்று தேர்வான சட்டமன்ற உறுப்பினர்களின் சம்பளம் 5 சதவீதத்தினாலும், முதல்வர் ஜேசன் கெனியின் சம்பளம் மேலும் 5 வீதம் அதிகரித்து 10 சதவீத்தினாலும் குறைக்கப்படவுள்ளது.
கடந்த ஏப்ரல் மாத்தில் இடம்பெற்ற தேர்தலில் பெரும்பான்மையைப் பெற்றுக்கொண்ட ஐக்கிய பழமைவாதக் கட்சி, தேர்தலின் போது தம்மால் வழங்கப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் இந்த ஏற்பாடுகளை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
முதல்வர் ஜேசன் கென்னி இப்போது ஆண்டுக்கு $186,000 சம்பளமாகவும் அதே நேரத்தில் அமைச்சரவை உறுப்பினர்கள் 181,000 டொலரும் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் $121,000 பெறுகிறமை குறிப்பிடத்தக்கது.