கடந்த ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலையடுத்து இவ்வாறு விசேட பயிற்சித் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக இராணுவம் குறிப்பிட்டுள்ளது.
இலங்கை இராணுவத்தின் 70 வீரர்களுக்கு விசேட பயிற்சிகளை வழங்குவதாக ரஷ்யா குறிப்பிட்டதாக அண்மையில் ரஷ்யாவிற்குப் பயணம் மேற்கொண்டிருந்த இராணுவத் தளபதி மகேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.
இந்தப் பயணத்தின்போது, கடந்த ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் குறித்தும், அதன் பின்னரான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் அந்நாட்டு காலாட்படையின் தலைமைப் பணிப்பாளரான ஒலெக் சாலியுகோவுடன் இராணுவத் தளபதி கலந்துரையாடியிருந்தார்.
இதன்போது, இலங்கையின் இராணுவ வீரர்களுக்கு பயிற்சி வழங்குவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதுடன், ஆலோசகர்கள் சிலரை இலங்கைக்கு அனுப்பவதற்கு எதிர்பார்த்துள்ளதாக ஒலெக் சாலியுகோ தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், குறித்த விசேட பயிற்சித் திட்டத்தை ரஷ்யா இலங்கை இராணுவத்தினருடன் இணைந்து மேற்கொள்ளவுள்ளது.