அத்துடன் இந்த வழக்கு விசாரணைகள் 45 நாட்களுக்குள் முடிக்கப்பட வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு இன்று (வியாழக்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு விசாரணையின் போது உன்னாவ் பெண்ணின் வழக்கறிஞர், உடன் பிறந்தவர்கள் என குடும்பத்தினர் அனைவருக்கும் உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட பெண்ணிற்கான இடைக்கால இழப்பீடாக உத்தரபிரதேச மாநில அரசு, 25 இலட்சம் ரூபாயை நஷ்ட ஈடாக வழங்க வேண்டும் எனவும் தலைமை நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி குற்றவாளிக்கு அதிகாரமளித்ததை பா.ஜ.க ஒப்புக்கொண்டுள்ளதாக விமர்சித்துள்ளார்.
அத்துடன் தன்னை திருத்திக்கொள்ளவும், அளவிடமுடியாத அளவிற்கு பாதிக்கப்பட்டுள்ள பெண்ணுக்கு நீதி கிடைக்கும் வகையிலான திசையில் செல்லவும் சில நடவடிக்கைகளை நீதிமன்றம் எடுத்துள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
உ.பி மாநிலம் உன்னோவ் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான குல்தீப்சிங் செங்கார் சிறுமியொருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.