அத்தோடு பிரெக்ஸிற்க்கு பின்னரான வர்த்தக ஒப்பந்தங்களுக்கான தனது முன்னுரிமை பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் இருப்பதாக வர்த்தக அமைச்சர் லிஸ் ட்ரஸ், நேற்று (வெள்ளிக்கிழமை) தெரிவித்துள்ளார்.
மேலும் அமெரிக்க வெளியுறவு செயலாளர் டொமினிக் ரோப் உடன் இங்கிலாந்து அமெரிக்க உறவுகளை மேம்படுத்துவது தொடர்பான பேச்சுவார்த்தைக்காக வொஷிங்டன் சென்றுள்ளதாகவும் அவர் கூறினார்.
அதன்படி, ஏப்ரல் மாதத்திலிருந்து அமெரிக்காவிலிருந்து இறக்குமதி 14%, அதாவது 78.27 பில்லியன் பவுண்ட்களாக (94.43 பில்லியன் டொலர்) அதிகரித்துள்ளது என்றும் இதேவேளை ஜேர்மனியிலிருந்து இறக்குமதி 0.1% குறைந்து 78.26 பில்லியன் பவுண்ட்களாக உள்ளது என வர்த்தகத் துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
ஜேர்மனி நீண்ட காலமாக பிரித்தானியாவின் மிகப்பெரிய இறக்குமதி ஆதாரமாக இருந்தபோதிலும், அமெரிக்கா கடந்த நிதியாண்டில் ஏற்றுமதியில் 121.6 பில்லியன் பவுண்ட்கள் என்ற சாதனையை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.