அண்மையில் புதிதாக வெளியிடப்பட்டுள்ள ஆய்வு அறிக்கை ஒன்றிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய பிரித்தானியா, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஒப்பந்தங்கள் எதுவுமின்றி வெளியேறினால், பிரான்சில் 140,000 பேர் வேலையிழக்கும் அபாயம் ஏற்படும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.
இதேபோன்று பெல்ஜிய அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட ஆய்வின் போது, பிரித்தானியா, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஒப்பந்தங்கள் எதுவும் இன்றி வெளியேறுமானால், ஐரோப்பாவிலுள்ள அனைத்து நாடுகளிலுமே வேலையிழப்பு அபாயம் உள்ளமை தெரியவந்துள்ளது.
ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் போது பிரித்தானியாவிற்கே அதிக பாதிப்பு ஏற்படக்கூடும் எனவும் அந்த ஆய்வு அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதற்கமைய பிரித்தானியாவில் 526,830 பேர் வேலையிழக்கும் நிலை ஏற்படக்கூடும் என ஆய்வின் நிறைவில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பெல்ஜியம், நெதர்லாந்து, டென்மார்க் மற்றும் அயர்லாந்து உள்ளிட்ட நாடுகளும் இதன்காரணமாக பாதிப்படையக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.