பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளனர்.
அதற்கமைய அவர்கள் இன்றும் (புதன்கிழமை) நாளையும் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
தமது சம்பள உயர்வு கோரிக்கைக்கு அமைச்சினால் தீர்வு வழங்கப்படவில்லை எனத் தெரிவித்தே அவர்கள் இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
இந்த விடயம் தொடர்பாக நிதி அமைச்சருடன் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தையின் மூலம் எந்தவிதத் தீர்வும் எட்டப்படவில்லை என அனைத்து பல்கலைக்கழகத் தொழிற்சங்க ஒன்றியத்தின் தலைவர் தம்மிக எஸ் பிரியந்த தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாகவே பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட தீர்மானித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.