இந்நிலையில் இது குறித்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பொலிஸ் அதிகாரி, இந்த துப்பாக்கிச்சூடு பயங்கரவாத முயற்சி என்ற கோணத்தில் விசாரணை இடம்பெற்றுவருவதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் கைது செய்யப்பட்ட குறித்த நபர் குயேற்றவாசிகளுக்கு எதிரான தீவிர வலதுசாரி கருத்துக்களை கொண்டிருந்தமை விசாரணையில் தெரியவந்துள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அந்நாட்டின் தலைநகர் ஒஸ்லோவின் புறநகரில் உள்ள அல்-நூர் இஸ்லாமிய தொழுகை இடத்தின் மீது துப்பாக்கிதாரி ஒருவர் தாக்குதலை மேற்கொண்டார்.
இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தை அடுத்து 20 வயது மதிக்கத்தக்க ஒருவரின் வீட்டில், 75 வயதான பெண்ணொருவர் உயிரிழந்து இருந்ததை தொடர்ந்து குறித்த இளைஞர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
சந்தேக நபர் ‘2 துப்பாக்கி போன்ற ஆயுதங்களையும் ஒரு துப்பாக்கியையும்’ எடுத்துச் சென்றதாக பள்ளிவாசலின் தலைமை உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.