ஜனாதிபதி தேர்தல் குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். குமார வெல்கம மேலும் கூறியுள்ளதாவது, “எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிராக செயற்பட மாட்டேன்.
ஆனால் அவர், தற்போது மேற்கொண்ட தீர்மானங்கள் தவறானவையாக உள்ளன. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினை பாதுகாக்கும் பொறுப்பு அவருக்கு உள்ளது.
மஹிந்தவுக்கும் எனக்கும் எவ்வித தனிப்பட்ட பிரச்சினைகளும், அரசியல் பிரச்சினைகளும் கிடையாது. ஆனால் ஒரு தரப்பினர் பிரச்சினைகளை ஏற்படுத்தி விட்டு நன்மதிப்பினை பெற்றுக் கொள்ள முயற்சிக்கின்றார்கள்.
ஜனநாயகத்தை மதிக்கும் கொலை குற்றச்சாட்டுக்களுடன் தொடர்பில்லாத ஒருவரை ஜனாதிபதி வேட்பாளராக மஹிந்த களமிறக்கினால் நிச்சயம் ஆதரவு வழங்குவேன்” என குமார வெல்கம தெரிவித்துள்ளார்.