தெனியாய பெவர்லி மாணிக்கவத்தை பிரதேசத்தில் வைத்து நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை தமது குழந்தை கடத்தப்பட்டுள்ளதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
குறித்த குழந்தை வீட்டில் உள்ள மற்றொரு சிறுமியுடன் முற்றத்தில் விளையாடிக்கொண்டிருந்த போது காணாமற் போயுள்ளார். உடனே பெற்றோர் அயலவர்களின் உதவியுடன் குழந்தையை தேடினர்.
இந்நிலையில், வீட்டிலிருந்து ஒரு கிலோமீற்றர் தூரத்தில் உள்ள சிங்கராஜா வனத்தின் எல்லைப் பகுதியில் குழந்தை மீட்கப்பட்டுள்ளது.
இதனிடையே, குழந்தை கடத்திச்செல்லப்பட்டு கைவிடப்பட்டுள்ளதாக, அவசர பொலிஸ் விரிவிற்கு தொடர்புகொண்டு பெற்றோர் முறையிட்ட நிலையில், தெனியாய பொலிஸார் விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.