ஆண்டு நினைவு தினம் தமிழர் பிரதேசங்களில் இன்று உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.
அந்த வகையில் உயிரிழந்த உறவுகளின் பதின்மூன்றாம் ஆண்டு நினைகூரல் நிகழ்வு முல்லைத்தீவு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்திலும் இடம்பெற்றது.
புதுக்குடியிருப்பில் அமைந்துள்ள முல்லைத்தீவு மாவட்ட அலுவலகத்தில் இன்று (புதன்கிழமை) மாலை இந்த நினைவுகூரல் நிகழ்வு நடைபெற்றது.
இதன்போது உயிரிழந்த மாணவர்களின் உருவப்படங்களுக்கு மலர்தூவி, தீபமேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
இதில், உயிரிழந்தவர்களின் உறவினர்கள், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன், கட்சியினுடைய உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.