தற்போது கம்போடியாவுக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி இன்று நாடு திரும்புகின்ற நிலையில் அடுத்த வாரமளவில் இந்த சந்திப்பு இடம்பெறும் என தகவல் வெளியாகியுள்ளது.
ஜனாதிபதிக்கும், எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையிலான முக்கிய சந்திப்பு கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்றிருந்தது.
இச்சந்திப்பில் ஜனாதிபதித் தேர்தல், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அடுத்தக்கட்ட செயற்பாடுகள் தொடர்பாக இரு தரப்பினரிடையே கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்றன.
இதன்போது, மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் குறித்து ஜனாதிபதி – கோட்டாபயவின் சந்திப்பில் அவதானம் செலுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் யார் என்பது குறித்த அறிவிப்பு நாளை இடம்பெறவுள்ள கட்சியின் தேசிய மாநாட்டில் அறிவிக்கப்படவுள்ளது. இந்நிலையில் பெரமுன சார்பில் கோட்டாபய ராஜபக்ஷ வேட்பாளராக களமிறக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.