இதனால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கர்நாடகா மற்றும் கேரளாவில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரம் அடைந்துள்ளது. இதனால் கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இரண்டு அணைகளில் இருந்தும் காவிரி ஆற்றில் தற்போது தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில் தண்ணீர் திறப்பு அளவும் அதிகரிக்கப்பட்டது.
இதனிடையே, மேட்டூர் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 10 அடி உயர்ந்துள்ளது. அணையின் நீர்மட்டம் இன்று மதியம் வரை 68 அடியாக உயர்ந்திருந்தது. அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 93 ஆயிரம் கன அடியாக உள்ளது.
இந்நிலையில், இன்று காலை முதல் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் மேட்டூர் அணை நீர்மட்டம் – 69.31 அடியாக உயர்ந்துள்ளது. 93 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து தற்போது, ஒரு இலட்சத்து 5 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையிலேயே காவிரிக் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது