ஐக்கிய நாடுகள் சபைக் கண்காணிப்பாளர்களினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இந்த வருட இறுதியில் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு தாக்குதல்களை மேற்கொள்ள திட்டமிட்டு வருவதாகவும் இதன்போது எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்த சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கையில்,
‘ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் தலைமை வெற்றிகரமாக அழிக்கப்பட்டிருந்தாலும், அக்குழுவின் தலைமைத்துவமானது ஸ்லீப்பர் செல்கள் மூலம், மீண்டும் எழுச்சி பெறும் விதத்தில், உயிர்பிழைத்து வேறு இடத்தில் இருந்து ஒருங்கிணைப்பதை நோக்கமாகக் கொண்டு திட்டமிட்டு செயல்பட்டுள்ளனர்.
ஐ.எஸ் பயங்கரவாதிகள் தனது திறனை மீண்டும் வெளிக்கொண்டுவரும் வகையில், பாதுகாப்பான இடமும் நேரமும் கிடைக்கும் போது சர்வதேச தாக்குதல்களை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளன’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, லண்டன், அமெரிக்கா உள்ளிட்;ட நாடுகளில் தாக்குதல் மேற்கொள்ளப்படும் என கடந்த தினங்களுக்கு முன்னர் ஒளிப்படங்கள் ஊடாக ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு எச்சரிக்கை விடுத்திருந்தமைக் குறிப்பிடத்தக்கது.