38 வயதான ரியான் புரோவெஞ்சர் என்பவரும், 37 வயதான ரிச்சர்ட் ஸ்கூரர் என்பவருமே இவ்வாறு காணாமல் போயுள்ளனர்.
இருவரும் கடந்த ஜூலை 17ஆம் திகதி வெள்ளை நிற ஜீப்பில், 16400 பிளொக்- 23ஏ அவனியு பகுதியில் இறுதியான தென்பட்டுள்ளனர்.
இதன்பிறகு ஜூலை 21ஆம் திகதி, வுடட் பகுதிக்கு அருகில் உள்ள லேக் பிசி பகுதியில் வைத்து இவர்களது வெள்ளை நிற ஜீப் மட்டும் கண்டுபிடிக்கப்பட்டது.
எனினும், இதுவரை இவர்கள் குறித்த எவ்வித தகவலும் வெளியாகாத நிலையில், இதுகுறித்து புதிய தகவலொன்றை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
புரோவெஞ்சருடன் தொடர்புடைய ஸ்பென்ஸ் பிரிட்ஜ் அருகே ஒரு கிராமப்புற சொத்தை தேடி இவர்கள் பயணித்து இருப்பதாகவும், இவர்கள் காணாமல் போவதற்கு தவறான விளையாட்டு ஒரு காரணியாக இருக்கலாம் என்றும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பில் பல்வேறு தவல்களை திரட்டியுள்ள பொலிஸார், இதுகுறித்து தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.