சுவிஸில் முன்னெடுக்கப்பட்ட ஆகழ்வுப்பணிகளின் போதே இந்த சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மரத்தைக் குடைந்து உருவாக்கப்பட்ட அபூர்வ சவப்பெட்டி ஒன்றில் குறித்த பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
2000 ஆண்டுகளுக்கு முன்னர் புதைக்கப்பட்டதாக கருதப்படும் குறித்த பெண்மணியின் உடை, மிகவும் உயர்ந்த ரக உடையாக இருந்ததோடு, அவர் விலையேறப்பெற்ற ஆபரணங்களையும் அணிந்திருந்ததாக கூறப்படுகின்றது.
சூரிச் மற்றும் ஆர்கா பகுதிகளிலுள்ள Limmat பள்ளத்தாக்குப் பகுதிகளில் குறித்த பெண் வளர்ந்திருக்கலாம் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.