(ஜெ.ஜெய்ஷிகன்)
லண்டன் சென்.இக்னேசியஸ் கல்லூரியில் முதலாம் தரம் தொடக்கம் உயர்தரம் வரை கல்வி கற்று கணிதப்பிரிவில் பரீட்சைக்கு தோற்றிய கல்லாற்று மாணவன் காறுஜன் 2A*, 1A சித்திகளைப் பெற்று இலங்கைத் திருநாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளான்.
2019 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சையில் தோற்றிய மாணவர்களுக்கான பெறுபேறுகள் கடந்த 15.08.2019ஆம் திகதி லண்டனில் வெளியாகியது. குறித்த மாணவன் மிகச் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று சாதனை படைத்து தற்போது கேம்பிறிட்ஐ பல்கலைக்கழகத்தில் பொறியியல்(M.Eng) துறையில் பட்டப்படிப்பை மேற் கொள்ள தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
குறித்த மாணவன் மட்டக்களப்பு தொழிநுட்பக் கல்லூரியின் முன்ளை நாள் விரிவுரையாளர் ஜெயசீலன் மற்றும் முன்ளை நாள் தாதிய உத்தியோகத்தர் சாந்தினி யூலியானா தம்பதிகளின் மகன் என்பதும் குறிப்பிடத் தக்கது. இத் தம்பதிகளின் மற்றறொரு மகள் லண்டன் - குயின் மெரி கல்கலைக்கழகத்தில் மருத்துவ பீட மாணவி என்பதும் கவனிக்கத் தக்கது.