ஊவா மாகாண ஆளுநர் மார்ஷல் பெரேரா தனது இராஜினாமா கடிதத்தை இன்று (வியாழக்கிழமை) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் ஒப்படைத்துள்ளார்.
ஆளுநர் பதவியில் இருந்து விலகுமாறு ஜனாதிபதி நேற்று கோரியிருந்ததை அடுத்தே அவர் தனது இராஜினாமா கடிதத்தை வழங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஊவா மாகாண சபையின் பதவிக்காலம் செப்டம்பர் 08 ஆம் திகதியுடன் நிறைவுக்கு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.