யுனிவர்சிட்டி டிரைவின் 600 தொகுதிகளில் ஒரு வாகன நிறுத்துமிடத்தில் வைத்து, 28 வயது இளைஞன் ஒருவரையும், 24 வயது பெண் ஒருவரையும், பொலிஸார் கைது செய்தனர். இதன்போது சிறிய அளவு மீதாம்பேட்டமைன் போதைப் பொருளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
மேலும், சந்தேகத்திற்கிடமான வீட்டில் இருந்த 39 வயதான ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதில், 28 வயதான ஆண் மீது நான்கு போதைப்பொருள் கடத்தல் மற்றும் உடைமை குற்றச்சாட்டுகளையும், 13 ஆயுதங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளையும் பொலிஸார் சுமத்தீயுள்ளனர். குற்றத்தால் பெறப்பட்ட சொத்துக்களை வைத்திருந்ததாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
காரில் இருந்த 24 வயது பெண் மீது மீதாம்பேட்டமைன் வைத்திருந்தமை மற்றும் அவரது நிபந்தனைகளை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
வீட்டில் இருந்த 39 வயது ஆண் மீது மீதாம்பேட்டமைன் வைத்திருத்தல் மற்றும் நிபந்தனைகளை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மீதாம்பேட்டமைன் போதைப் பொருளை கடத்திய சந்தேகத்தின் அடிப்படையில், ஜூலை மாதம் அதிகாரிகள் இவர்களை விசாரிக்க தொடங்கினர்.
இதனடிப்படையில், 300 பிளொக்- கம்பர்லேண்ட் அவென்யூவில் உள்ள ஒரு வீட்டை சோதனையிட்ட பொலிஸார், அங்கு கத்தி, துப்பாக்கி, 3,300 டொலர்களிற்கும் அதிகமான பணம், 19 ஹைட்ரோமார்போன் மாத்திரைகள், கொகேயின் மற்றும் மீதாம்பேட்டமைன் 88 கிராம் ஆகியவற்றினை பொலிஸார் கைப்பற்றினர்.
மேலும், போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளில் பொதுவாகக் காணப்படும் பொருட்களையும் கண்டறிந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனடிப்படையிலேயே குறித்த மூவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள பொலிஸார், இதுகுறித்து தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்துடன் மேலும் மூன்று பெண்கள் வீட்டில் கைது செய்யப்பட்டாலும், அவர்கள் பின்னர் விடுவிக்கப்பட்டனர்.