ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையில் இணக்கப்பாட்டை ஏற்படுத்தும் முகமாக அடுத்தவாரம் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவும் நேரடியாக சந்தித்து தீர்மானம் எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ள அவர், அடுத்த வார சந்திப்பில் ஒரு இணக்கப்பாடு எட்டப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
இரு கட்சிகளுக்கும் இடையிலான இணக்கப்பாடு தொடர்பாக கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அவர் தெரிவிக்கையில், “ஒரே அணியினர் பிளவுபட்டு ஒருவரையொருவர் விமர்சித்து அரசியல் செய்வதில் எந்த அர்த்தமும் இல்லை. முதலில் பொது இணக்கப்பாடு அடிப்படையில் ஒரு தீர்மானத்தை எட்ட வேண்டும்.
மேலும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் நாம் இணைய மாட்டோம் என்று கூறவில்லை. அது குறித்த பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படும். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை அவர்களும் நிராகரிக்கவில்லை. இந்த விடயத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவும் நேரடியாக சந்தித்து தீர்மானம் எடுக்க வேண்டும். அடுத்த வாரம் இந்த சந்திப்பு இடம்பெறும்.
அதுவரையில் கட்சியின் தீர்மானம் குறித்து சிந்திக்க வேண்டிய அவசியமில்லை” என்று தெரிவித்தார்.