LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Monday, August 5, 2019

காஷ்மீர் விவகாரம் : ஏர் இந்தியா விமான சேவை வழங்கியுள்ள விசேட சலுகை!

காஷ்மீரிலிருந்து அமர்நாத் யாத்ரீகர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் தொடர்ந்து வெளியேறி வருவதால், விமானங்களுக்கான அதிகபட்ச கட்டணம் குறைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன்படி ஸ்ரீநகர்-டெல்லி இடையேயான விமானங்களுக்கான அதிகபட்ச கட்டணம் ஏழு ஆயிரம் ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது குறித்த அந்நிறுவனம் தெரிவிக்கையில், மாநில அரசு நிர்வாகம் காஷ்மீர் மாநிலத்திலிருந்து வெளியேறும்படி கேட்டுக்கொண்டுள்ள நிலையில், அமர்நாத் யாத்ரீகர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் ஏராளமானோர் ஸ்ரீநகர் விமான நிலையத்தை நோக்கி வந்துகொண்டிருக்கிறார்கள்.

இதனைக் கருத்தில் கொண்டு  ஸ்ரீநகர் விமான நிலையத்திலிருந்து கூடுதல் விமானங்களை இயக்கத் தயாராக இருக்கும்படியும் விமான நிறுவனங்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

மேலும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம், பயணிகளுக்கு உதவும் வகையில் பயணச்சீட்டுக்கான விலையைக் குறைக்கும்படி விமான நிறுவனங்களுக்கு அறிவுறுத்தியது.

இதன்படி ஸ்ரீநகர்-டெல்லி வழித்தடத்திற்கான அதிகபட்ச கட்டணத்தை 9,500 ரூபாயிலிருந்து 6.715 ரூபாயாகவும், டெல்லி-ஸ்ரீநகர் வழித்தடத்திற்கான கட்டணம் 6,899 ரூபாயாகவும் குறைக்கப்பட்டுள்ளது.

இந்த சலுகை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 15ஆம் திகதிவரை நடைமுறையில் இருக்கும் எனவும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

காஷ்மீரில் தற்போதைய சூழலை கருத்திற்கொண்டு அம்மாநிலத்தில் தங்கியுள்ள கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட சுற்றுலா பயணிகளையும் சொந்தவூருக்கு செல்லுமாறு மாநில நிர்வாகம் அறிவித்திருந்தது.

இதன்காரணமாக விமானப் பயணிகளுக்கான பயணச்சீட்டு விலை குறைக்கப்படுவதாக ஏர் இந்தியா அறிவித்துள்ளதுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7