பிரித்தானிய அரசாங்கத்தின் இலட்சியமானது அழிவுகரமான, தேசியவாத சித்தாந்தம் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
ஒப்பந்தமற்ற பிரெக்ஸிற் ஏற்படுத்தும் பாதகமான விளைவு தொடர்பாக நேற்று (சனிக்கிழமை) கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
மேலும் பிரதமர் பொரிஸ் ஜோன்சனின் புதிய ஆலோசகரான டொமினிக் கம்மிங்ஸையும் அவர் விமர்சித்துள்ளார்.
இங்கிலாந்தின் சில பகுதிகளுக்கு விஜயம் செய்திருந்த கோர்டன் பிரவுன், “ஐரோப்பிய ஒன்றியத்தின் அதிகாரத்தில் தீவிர நம்பிக்கை கொண்டவன் தான் ” என கூறினார்.
ஆனால் ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒப்பந்தமொன்றை மேற்கொள்ள விரும்புவதாகத் தெரிவித்துள்ள பிரதமர் பொரிஸ் ஜோன்சன், ஒக்ரோபர் 31 க்குள் பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறவேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை ஒப்பந்தமற்ற பிரெக்ஸிற் ஏற்பாடுகளுக்கு முன்னுரிமை கொடுக்கவேண்டுமென அரச ஊழியர்களுக்கு கடிதம் மூலம் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.