அத்துடன் நீர்கொழும்பில் புனித செபஸ்தியார் திருச்சசொரூபம் சேதமாக்கப்பட்ட சம்பவத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எத்தகைய தொடர்பும் இல்லை எனவும் ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது.
திருச்சொரூபம் உடைப்பு தொடர்பாக தெரிவிக்கும்போதே பிரஜைகள் ஒன்றியத்தினர் இவ்வாறு குற்றஞ்சாட்டியுள்ளனர்.
அத்துடன், இந்த தாக்குதலின் பின்னணியில் அடிப்படை வாதக்குழுக்கள் உள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், நீர்கொழும்பு பகுதியில் தற்கொலைக் குண்டுத் தாக்குதலுக்கு இலக்காகி உறவுகளை இழந்த கத்தோலிக்க மக்களுக்கும் ஏனைய சமூகத்தினருக்கும் இடையிலான நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் பொருட்டு கடுமையாக உழைத்து வருகின்றோம் எனக் குறிப்பிட்டுள்ள ஒன்றியத்தினர், இவ்வாறு அமைதியை சீர்குலைக்கும் செயற்பாடுகளை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் தெரிவித்தனர்.