தற்போதைய அரசியல் நிலைவரம் குறித்து கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். செஹான் சேமசிங்க மேலும் கூறியுள்ளதாவது, “ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்று அறிவித்தவுடன் கட்சி மூன்றாக பிளவுப்படுவது உறுதி.
ஐக்கிய தேசிய கட்சியின் உள்ளக பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாத தலைமைத்துவத்தினால் ஒருபோதும் நாட்டின் பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக் கொடுக்க முடியாது.
பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் குறித்து எவ்வித முரண்பாடுகளும் எதிரணிக்குள் கிடையாது. தலைமைத்துவத்தின் கருத்திற்கு அனைத்து தரப்பினரும் இதுவரையில் இணக்கம் தெரிவித்து தீர்மானங்களை ஏற்றுக் கொண்டுள்ளோம்.
எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்று உத்தியோகப்பூர்வமாக இம்மாதம் 11 ஆம் திகதி அறிவிக்கப்படும்” என செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.