இந்த விடயம் தொடர்பாக அரச மருத்துவ உத்தியோகத்தர் சங்கத்தின் திருகோணமலை மாவட்ட கிளையினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடக சந்திப்பு இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றது.
இந்த சந்திப்பில், திருகோணமலை மாவட்டத்திலுள்ள வைத்தியசாலைகளுக்கு தரம் குறைந்த மருந்துப் பொருட்களையும், குறைந்த காலத்தில் காலாவதியாகக் கூடிய மருந்துப் பொருட்களையும் வழங்குவதாக தெரிவித்துள்ள மருத்துவ உத்தியோகத்தர்கள், இதற்கான தீர்வினை உடனடியாக வழங்காவிட்டால் தாம் பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
அத்துடன், அதி தீவரமான நோய்களுக்கு வழங்கப்படுகின்ற மருந்துகளை குறைந்தளவில் வழங்குவதாக தெரிவித்ததுடன், வைத்தியர்கள் போதியளவில் இருக்கின்ற போதும் மருந்து குறைபாடுகளால் மக்களுக்கு சிறந்த சேவையை தம்மால் வழங்க முடியாதுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, திருகோணமலை வைத்தியர் சங்கத்தினால் காட்சிப்படுத்தப்பட்ட பதாதைகள் சுகாதார அமைச்சின் செயலாளரினால் அகற்றப்பட்டுள்ளதாகவும், அதற்கு தாம் கண்டணம் தெரிவிப்பதாகவும் மருத்துவ உத்தியோகத்தர் சங்கத்தினர் குறிப்பிட்டனர்.