மில்ரன் கீன்ஸைச் சேர்ந்த அலானா கட்லன்ட் கடந்த வாரம் மடகஸ்கரில் சிறிய விமானமொன்றில் பயணித்தபோது விமானத்தின் கதவைத் திறந்து கீழே குதித்து உயிரிழந்தார் என்று மடகஸ்கர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த மாணவியின் உடல் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.
அலானா கட்லன்ட் மனக்குழப்பம் காரணமாக விமானத்திலிருந்து கீழே குதித்து உயிரிழந்திருக்கலாம் என மடகஸ்கர் பொலிஸ் கேணல் டி லா பைக் ரலைவானரி (D’y La Paix Ralaivaonary) தெரிவித்துள்ளார்.
மேலும் அலானா மலேரியாத் தடுப்பு மருந்துகளைப் பாவித்ததற்கான தடயங்களும் இல்லையெனவும் உறுதிப்படுத்தியுள்ளார்.
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ரொபின்சன் கல்லூரியின் இயற்கை விஞ்ஞானத்துறை மாணவியான அலானா கட்லன்ட், மடகஸ்கர் தீவில் கற்றல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோதே உயிரிழந்தார்.