LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Monday, August 12, 2019

இளைஞர்களிடம் அதிகாரங்களை பெற்றுக்கொடுத்து எதிர்காலத்தை வளமாக்குவோம் – சஜித்

இளைஞர்களிடம் அதிகாரங்களை பெற்றுக்கொடுத்து நாட்டின் எதிர்காலத்தை வளமானதாக மாற்றுவோம் என அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

மேலும் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த நாங்கள் நம்மை அர்ப்பணிப்போம் என்றும் அவர் கூறினார். பதுளையில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற மக்கள் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றகையில் அவர் இதனைக் கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “பாதுகாப்பான மற்றும் முன்னேற்றமடைந்த நாட்டை உருவாக்குவேன் என்பதை இந்த இடத்தில் மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கின்றேன்.

அரசியல் ஆட்சி அதிகாரம் என்பது தற்காலிகமான ஒன்று என்பதை அனைத்து ஆட்சியாளர்களும் புரிந்துகொள்ள வேண்டும். நாட்டின் முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு அந்த காலத்தை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

நாடு முன்னேற்றமடைய வேண்டுமென்றால், சிறிய மற்றும் நடுத்தர தொழிற் முயற்சிகள் வலுப்படுத்தப்பட வேண்டும். அவர்கள்தான் பொருளாதார முன்னேற்றத்தின் வலுவான இயந்திரங்கள்.

எமது நாட்டின் பொருளாதார எஞ்சின்களை வலுப்படுத்தி நாம் முன்னேறி செல்லவேண்டும். இளைஞர்களிடம் அதிகாரங்களை பெற்றுக்கொடுத்து நாட்டின் எதிர்காலத்தை வளமானதாக மாற்றுவோம்.

கடந்த காலத்தில், அபிவிருத்திகள் தொடர்பில் பெரிதாக பேசப்பட்டாலும், அப்போது எல்லாம் மத்திய தரவர்க்கத்தினர் மாற்றான் தாய் மனப்பான்மையுடன்தான் பார்க்கப்பட்டார்கள். இதனை நான் நிச்சயமாக மாற்றியமைப்பேன் என்பதை நான் இவ்வேளையில் உறுதியுடன் கூறிக்கொள்கிறேன்.

அதேநேரம், நாட்டை நாம் பலப்படுத்த வேண்டுமெனில் தேசிய பாதுகாப்பு பலப்படுத்தப்படல் அவசியமாகும். எமது நாட்டில் இனிமேல் பயங்கரவாதத்திற்கு என்றும் இடமிருக்கப்போவதில்லை.

பயங்கரவாதத்தை கட்டுப்படுத்துவதற்கு மாறாக, அதனை முற்றாக அழிப்பதே எமது இலக்காகும். இதற்கான அனைத்து செயற்பாடுகளையும் நாம் மேற்கொள்வோம்.

சிங்கள – பௌத்த தலைவர்கள் என்ற ரீதியில் நாங்கள் புத்த பகவானின் போதனைகளுக்கு மதிப்பளித்து இன, மத, மொழி, பேதங்கள் பாராது நாட்டு மக்கள் அனைவரையும் சமமான விதத்தில் நடத்தவேண்டும்.

30 வருட யுத்தத்தை வெற்றிக்கொள்ள தம்மை அர்ப்பணித்த பாதுகாப்பு படை வீரர்களின் அபிவிருத்திக்கு நாங்கள் பாரிய பங்களிப்பினை வழங்குவோம்.

பொருந்தோட்ட தொழிலாளர்கள் எமது நாட்டின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். நாங்கள் நிச்சயமாக மலையக மக்களை பாதுகாப்போம்.

மேலும், தற்போது சர்வதேச ரீதியாக செய்துக்கொள்ளப்படும் ஒப்பந்தங்கள் குறித்து அதிகளவாக கருத்துக்கள் வெளியிடப்படுகின்றன. நான் ஒன்றை இங்குக் கூறிக்கொள்ள விரும்புகிறேன்.

அதாவது நாட்டுக்கு பயனுள்ள எந்தவொரு ஒப்பந்தத்தையும் செய்துக்கொள்வதில் தவறில்லை. ஆனால், நாட்டின் சுயாதீனத்தை பாதிக்கும் எந்தவொரு ஒப்பந்தத்தையும் நாம் எமது காலத்தில் செய்துக்கொள்ளப்போவதில்லை என்பதையும் இங்கு உறுதியாகத் தெரிவித்துக்கொள்கிறேன்.

அரச சேவையை மேலும் வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். எமது பயணத்தில் அனைத்தையும் விட நாங்கள் மனிதத்துக்கு முதலிடம் வழங்குவோம்.

உங்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை என் உயிரிலும் அதிகமான மதித்து காப்பாற்றுவேன். எனக்கு பயமில்லை. நான் அச்சப்படுபவன் கிடையாது. மக்களுக்காக எனது உயிரையும் கொடுக்க தாயர்.

எனக்கு 52 வயதாகிவிட்டது. நான் மரணத்தை கண்டு அச்சமடைபவன் கிடையாது. எனது, தந்தையை போல நடு வீதியில் மக்களுக்காக உயிரை விடுவதற்கும் தயாராக உள்ளேன்” என கூறினார்.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7