நெல்லையில் இன்று (திங்கட்கிழமை) செய்தியாளர்களை சந்தித்தார். இதன்போது தமிழகத்தில் இருக்கும் இலங்கை தமிழர்கள் இரட்டை குடியுரிமை கேட்பது தொடர்பாக செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “பங்களாதேஷ் மற்றும் திபெத்தில் இருந்துவந்த அகதிகளுக்கு கொடுத்த முன்னுரிமையினை தமிழர்களுக்கு தரவில்லை.
குறிப்பாக திபெத்தியர்களுக்குக்கான அனைத்து அடிப்படை வசதிகளையும் அரசாங்கம் செய்து கொடுத்துள்ளது. ஆனால் இங்கிருக்கும் இலங்கை தமிழர்களுக்கு எந்தவொரு அடிப்படை வசதிகளையும் அரசாங்கம் செய்து கொடுக்கவில்லை.
இவ்வாறு இருக்கையில் அவர்களது கோரிக்கைகளை மத்திய அரசாங்கம் நிறைவேற்றுமா என்பது சந்தேகமே. இருப்பினும் இந்த நல்லவிடயங்களை விடுத்து தமிழகத்தை பாதிக்கும் வகையில் பல திட்டங்கள் மட்டும் கொண்டுவரப்படுவதாக” என சீமான் குற்றம் சாட்டினார்.