ஒஷாவா வீட்டுத்திட்டப் பகுதியில் வைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில், பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
விசாரணைகள் மிகவும் ஆரம்ப நிலையிலேயே உள்ளதனால், தற்போதைக்கு சந்தேக நபர்கள் உள்ளிட்ட எந்தவித விபரங்களையும் வெளியிடமுடியாதுள்ளதாகவும், அந்தப் பகுதியில் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், சம்பவத்தை நேரில் பார்த்தோர் யாராவது இருந்தால், அல்லது அது குறித்து ஏதாவது தகவல் அறிந்திருந்தால் தம்மைத் தொடர்பு கொள்ளுமாறும் பொலிஸார், வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
ரிட்சன் வீதி மற்றும் டென்டோன் வீதி பகுதியில் பென்ட்லேண்ட் வீதியில் உள்ள குடியிருப்புப் பகுதியில் இடம்பெற்ற குறித்த துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலில் 18 வயது இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.