அலுவலகத்தின் பிராந்திய அலுவலகம் யாழ்ப்பாணத்தில் நிறுவப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் எதிர்வரும் 24 ஆம் திகதி இதனை நிறுவவுள்ளதாக காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகத்தின் தவிசாளர் சாலிய பீரிஸ் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
குறித்த அலுவலகமானது 124 ஆடியபாதம் வீதி, யாழப்பாணம் என்ற முகவரியில் ஆரம்பிக்கப்படவுள்ளது.
குறித்த காணமால் ஆக்கப்பட்டோருக்கான அலுலகம் தற்போது மாத்தறை மற்றும் மன்னாரில் இயங்கி வரும் நிலையில் மூன்றாவது பிராந்திய அலுவலகமாக யாழ். அலுவலகம் இயங்கவுள்ளது.
பல்வேறு சூழ்நிலைகளில் கடந்த காலங்களில் காணாமல் ஆக்கப்பட்டோரின் விபரங்களை குறித்த அலுவலகம் சேகரித்து வருவதுடன், பிரதேச மட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்ப உறுப்பினர்கள் முன்வைக்கும் முறைப்பாடுகள் குறித்தும் இந்நிறுவனம் ஆராய்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது