சவுதி அரேபியாவை சேர்ந்த 22 வயதான துவா மற்றும் 20 வயதான தலால் அல் ஷோவாக்கி ஆகிய இரு சகோதரிகளுமே இவ்வாறு புகலிடம் கோரியுள்ளனர்.
தங்களை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு இரையாக்கும் தந்தையிடமிருந்து தப்பி வந்ததாக கூறும் இருவரும், தங்களின் விருப்பத்திற்கு எதிராக முதியவர் ஒருவருக்கு திருமணம் செய்து வைக்க தங்களது தந்தை முயற்சி மேற்கொள்வதாகவும் குற்றம் சுமத்தியுள்ளனர்.
துருக்கியில் விடுமுறையை கழிக்க குடும்பத்துடன் சென்ற நிலையில், தாங்கள் இருவரும் தப்பியதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஜூன் மாதம் 10ஆம் திகதி முதல் தலைமறைவாக இருக்கும் இருவரும் தற்போது கனடாவில் அடைக்கலம் கோரியுள்ளனர்.