இந்திய பொருளாதாரம் தொடர்பான செய்தி ஒன்றினை டுவிட்டரில் பகிர்ந்து, கருத்து தெரிவிக்கும்போதே அவர் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.
அவர் அதில் மேலும் பதிவிட்டுள்ளதாவது, “மிஸ்டர் பிரதமர், இந்தியப் பொருளாதாரம் தடம் புரண்டுள்ளது. சுரங்கப் பாதையின் முடிவில் வெளிச்சம் தென்படவில்லை.
அப்படி வெளிச்சம் இருக்கிறது என்று திறமையற்ற உங்கள் நிதி அமைச்சர் சொல்கிறார் என்றால். நாம் பொருளாதார மந்த நிலையை நோக்கி முழு வேகத்தில் சென்று கொண்டிருக்கிறோம் என நம்புங்கள் ” என பதிவிட்டுள்ளார்.