இந்நிலையில் எதிர்வரும் 6ஆம் திகதியில் இருந்து தினமும் விசாரணை மேற்கொள்ளப்படும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.
அயோத்தி விவகாரம் குறித்து சமரசக்குழு அறிக்கை சமர்பித்துள்ள நிலையில், குறித்த வழக்கு இன்று (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே குறித்த அறிவிப்பை நீதிமன்றம் வெளியிட்டுள்ளது.
அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் யாருக்குச் சொந்தமானது என்பது தொடர்பான மேன்முறையீட்டு வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான 5 நீதிபதிகளைக் கொண்ட குழு அரசியலமைப்புச் சட்ட அமர்வில், இந்த வழக்கை விசாரணை செய்து வருகிறது.
அதேசமயம், அயோத்தி வழக்கில் சம்பந்தப்பட்ட தரப்புகளிடையே பேச்சு நடத்தி, இணக்கமான தீர்வு காண்பதற்காக ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி இப்ராஹிம் கலிஃபுல்லா தலைமையில் மத்தியஸ்த குழு அமைக்கப்பட்டது.
குறித்த குழு நேற்று அறிக்கையொன்றை தாக்கல் செய்திருந்ததுடன், இந்த விவகாரத்தில் சமரசம் ஏற்படவில்லை எனத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.