கடந்த ஆண்டு, கல்கரியின் தென்மேற்கே இடம்பெற்ற விமான விபத்தில் சிக்கி இரண்டு கனேடியர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இந்தநிலையில் ஒக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாகவே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விமான விபத்து குறித்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகள் ஊடாகவே இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளதாக கனேடிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதுகுறித்த விசாரணை அறிக்கை கனேடிய போக்குவரத்து பாதுகாப்பு ஆணையகத்திடம் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.