கடந்த வெள்ளிக்கிழமை இவர்கள் அடையாளம் காணப்பட்டதாக பிரான்ஸ் ஊடகத்தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ்வாறு அடையாளங்காணப்பட்டவர்களில் இருவர் சிறைக்கைதிகள் என தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், மற்றுமொரு 32 வயதான சந்தேக நபர் அடையாளங்காணப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள பொலிஸார், அவர்கள் குறித்த மேலதிக தகவல்கள் எதனையும் வெளியிடவில்லை.
சிறைச்சாலை அதிகாரிகளை தாக்குவதும், நிறுவனங்களை குறிவைத்து தாக்குவதும், வீதிகளில் செல்வோரை தாக்குவதும் என பல பயங்கரவாத திட்டங்களை இவர்கள் வகுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்தநிலையில் குறித்த சந்தேக நபர்களிடம் தொடர்ச்சியாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பிரான்ஸ் ஊடகத்தகவல்கள் தெரிவிக்கின்றன.