பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது பயிற்சிக் கம்பம் ஒன்று அவரது கழுத்தினை துளைத்து கொண்டு சென்றதால் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று முன்தினம் மாலை இடம்பெற்ற இந்த சம்பவத்தை அடுத்து, அவசர சிகிச்சை பிரிவினர் அழைக்கப்பட்டதுடன், உலங்கு வானூர்தி மூலம் இளைஞர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லபட்டார்.
இருப்பினும், அவர் உயிர் பிழைப்பதில் சந்தேகம் இருப்பதாக கனடா பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
இது தொடர்பில், வெஸ்ட் மிட்லாண்ட்ஸ் அவசர சிகிச்சை சேவை கூறுகையில், நேற்று முன்தினம் தமக்கு அவசர அழைப்பு கிடைத்ததாகவும், பாதிக்கப்பட்ட இளைஞரை முதலுதவிக்கு உட்படுத்தி உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்ததாகவும் குறிப்பிட்டுள்ளது.
எனினும், பாதிக்கப்பட்ட இளைஞர் சற்று கவலைக்கிடமான நிலையிலேயே இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.