காற்று காரணமாக 17 வீடுகள் முற்றாகவும் 1,124 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
அந்தவகையில், கடந்த புதன்கிழமை இரவு முதல் இன்று (வெள்ளிக்கிழமை) வரை நாடு முழுவதும் வீசிய பலத்த காற்றின் காரணமாகவே இவ்வாறு ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதிப் கொடிபிலி தெரிவித்தார். இந்த அனர்த்தத்தினால் 4,918 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வவுனியா,இரத்தினபுரி, கேகாலை, புத்தளம், அம்பாந்தோட்டை, நுவரெலியா, கம்பஹா, களுத்துறை, காலி, குருணாகல், திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அனுராதபுரம் ஆகியே மாவட்டங்களிலேயே இந்தப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட வீடுகள் தொடர்பாக மதீப்பிடு செய்து இழப்பீடுகளை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ள உதவிப் பணிப்பாளர், இழப்பீட்டுக்கான ஆவணங்கள் தொடர்பான விபரங்களுக்கு பாதிக்கப்பட்ட மக்கள் அந்ததந்த கிராம சேவையாளருடன் தொடர்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்