சுமத்ரா மற்றும் ஜாவா தீவுகளில் இவ்வாறு நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தோனேசிய புவி ஆராய்ச்சி நிறுவனம் சுனாமி எச்சரிக்கையை வெளியிட்டது.
இந்நிலையில் இந்தோனேசிய அதிகாரிகள், கடற்கரைக்கு அருகில் வசிக்கும் மக்களை உயரமான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
இந்தோனேசியாவின் ஜாவா தீவின் தென்மேற்கு கடற்கரையில் 42 கிலோமீட்டர் (26 மைல்) ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் அல்லது உயிரிழப்புகள் பற்றிய உடனடி அறிவிப்புக்கள் எதுவும் வெளியாகவில்லை.
இதேவேளை, இந்த நிலநடுக்கத்தால் இலங்கைக்கு பாதிப்பு இல்லையென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.