தமிழர்களின் அரசியல் தீர்வுக்கு சர்வதேசத்தின் மத்தியஸ்தம் என்பது, சாத்தியமற்ற ஒரு விடயமாகும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன் தெரிவித்தார
யாழ்.ஊடக அமையத்தில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இருப்பினும் அடுத்த தேர்தலில் போட்டியிடும் எந்த ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிப்பது என்பது தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பு இதுவரை தீர்மானிக்கவில்லை என்றும் அவர் கூறினார்.
அத்தோடு சர்வதேசம் வழங்கும் உத்தரவாதத்திற்கு அமைவாக யாரை ஆதரிப்பது என்பது தொடர்பாக தீர்மானிப்போம் என தெரிவித்த அவர், இந்த உத்தரவாதத்தை எந்த நாடு வழங்கும் என்பது கேள்விக்குறியான விடயம் என்றும் அவர் கூறினார்.
குறிப்பாக இந்தியா – இலங்கை ஒப்பந்தத்தை கூட சரியான முறையில் நடைமுறைப்படுத்தாத இவர்கள், தேர்தலின் பின்னர் வழங்கப்பட்ட உத்தரவாதத்தை முழுமையாக நடைமுறைப் படுத்துவார்கள் என்பதை எதிர்பார்க்க முடியாது என கூறினார்.