மன்னார் மாவட்ட பகுதிகளில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களின் புனரமைப்பு பணிக்காக சுமார் 5.5 மில்லியன் ரூபாய் நீதிக்கான ஆவனம் இன்று (வியாழக்கிழமை) காலை கையளிக்கப்பட்டுள்ளது.
மன்னார் ஆயர் இல்லத்தில் வைத்து மன்னார் மறைமாவட்ட ஆயர் கலாநிதி இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை அவர்களிடம் ஐக்கிய தேசிய கட்சியின் வன்னி மாவட்ட அமைப்பாளர் ஜேம்ஸ் பிரிமிலஸ் கொஸ்தா கையளிக்கப்பட்டது.
இதன்போது மன்னார் மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் அமைப்பாளர் அப்துல் சமியூ முஹமது பஸ்மி உற்பட கட்சியின் முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டு வழங்கி வைத்தனர்.
மன்னார் மாவட்டத்தில் உள்ள 9 ஆலயங்களுக்கு முதல் கட்ட நிதியாக ஆலய புனரமைப்புக்காக மன்னார் மறைமாவட்ட ஆயர் மற்றும் குருக்களின் வேண்டுகோளுக்கு அமைவாக குறித்த நிதி வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.