லாரன்டியன்ஸில் ஆற்றில் 6 மாத குழந்தை ஆற்றில் அடித்து செல்லப்பட்டு, மூழ்கி உயிரிழந்த சோக சம்பவம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள நிலையில், இதுகுறித்த விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
நேற்று முன்தினம் (வியாழக்கிழமை) மாலை ஒட்டாவாவிலிருந்து வடக்கே 220 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஃபெர்ம்-நியூவ்,லாரன்டியன்ஸில் ஆற்றில் குறித்த குழந்தை அடித்துச் செல்லப்பட்டள்ளது.
பின்னர், பாதுகாப்பு படையினரின் மூன்று மணி நேர போராடத்திற்கு பிறகு குறித்த குழந்தை, சடலமாக கண்டெடுக்கப்பட்டது. இதனையடுத்து குறித்த குழந்தை, பிரேத பரிசோதனைக்கு பிறகு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
குறித்த குழந்தையை வைத்திருந்தவர் ஆற்றில் இறங்கிய போது தனது கட்டுப்பாட்டை இழந்ததாகவும். அதன்பின்னர் குழந்தை நிரோட்டத்தில் அடித்து செல்லப்பட்டதாகவும் விசாரணையாளர்கள் நம்புகின்றனர்.