துறைமுக நகரமான டார் எஸ் சலாம் நகருக்கு மேற்கே 200 கி.மீ. தொலைவில் உள்ள மொரோகோரோ பகுதியில் இந்த சம்பவம் இன்று (சனிக்கிழமை) நிகழ்ந்துள்ளது.
வீதியில் கவிழ்ந்த வாகனத்திலிருந்து எரிபொருளை மீட்க மக்கள் முயற்சித்ததாகவும் இதன்போது குறித்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றது என பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த வெடிப்பு சம்பவத்தில் காயமடைந்தவர்களில் பலர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் எனவே உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அச்சம் வெளியிட்டுள்ளனர்.
ஆபிரிக்காவின் சில பகுதிகளில் இதுபோன்ற பேரழிவுகள் அடிக்கடி இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.